முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக ஹோமதீஸ்வரா கோயிலில் பாகுபலி சிலையை தரிசிக்க ராஜ்நாத்சிங் இன்று வருகை

சனிக்கிழமை, 24 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

சரவணா பெலகோலா: கர்நாடகா மாநிலம் சரவணா பெலகோலாவில் ஹோமதீஸ்வரா கோவிலில் நடைபெறும் மகாமஸ்தாபிஷேக விழாவில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று கலந்து கொள்கிறார்.

கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள சந்திரகிரி மலையில் உள்ள சரவணா பெலகோலாவில் ஹோமதீஸ்வரா கோவில் உள்ளது. இங்கு 57 அடி உயரத்தில் சித்தா பாகுபலியின் சிலை உள்ளது. இந்த கோவிலில் 12 வருடத்திற்கு ஒருமுறை மகாமஸ்தாபிஷேக விழா நடைபெறும். தற்போது இந்த விழா அங்கு நடந்து வருகிறது. இதில் இந்தியா முழுவதிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்று வருகிறார்கள்.

பாகுபலி சிலைக்கு பூஜை
நிறைவு நாளான இன்று நடைபெறும் விழாவில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொள்ள உள்ளார். டெல்லியில் இருந்து எல்லைப்பாதுகாப்பு படை ஹெலிகாப்டர் மூலம் ராஜ்நாத் சிங் வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த விழாவின் முதல் 4 நாட்களில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். பாகுபலி சிலைக்கு தினமும் பால் மற்றும் பல்வேறு புனித பொருட்களால் பூஜை செய்யப்பட்டு வருகிறது. பல லட்சம் பக்தர்கள் திரண்டுள்ளதால் பாகுபலி சிலையை தரிசிக்க நீண்டநேரம் ஆகிறது. பக்தர்கள் 5 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்கிறார்கள்.

ஹெலிகாப்டரில் பார்வையிடலாம்
சிலையை ஆகாயத்தில் இருந்து பார்க்கும் வகையில் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்களை ஏற்றி வரும் ஹெலிகாப்டர் 8 நிமிடம் சிலைக்கு மேல் வட்டமிட்டு சுற்றி காண்பிக்கிறது. இதற்கு நபருக்கு ரூ.2100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பாகுபலி கோவிலில் முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக மந்திரி உமாஸ்ரீ ஆகியோர் தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து