முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல்: பா.ஜ. உயர்மட்ட குழு கூட்டத்தில் ஆலோசனை

சனிக்கிழமை, 24 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, பாராளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்துவது குறித்து வருகிற 28-ந்தேதி நடைபெற உள்ள பா.ஜனதா கட்சியின் உயர்மட்டக்குழுவில் ஆலோசிக்கப்படுகிறது.

தேர்தல் கமிஷன் சம்மதம்

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலுடன் சட்ட சபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் யோசனை தெரிவித்து வருகிறார்கள். பிரதமர் மோடியும் இந்த கருத்தை முன்வைத்து வருகிறார். அடிக்கடி தேர்தல் நடத்துவதால் ஏற்படும் செலவினங்களை குறைக்கவும் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுவதால் வளர்ச்சி திட்டப் பணிகள் தடைபடுவதாகவும் கருத்து நிலவுகிறது. பாராளுமன்றத்துக்கும் சட்டசபைக் கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயார் என்று தேர்தல் கமி‌ஷனும் சம்மதம் தெரிவித்துள்ளது.

முன்கூட்டியே தேர்தல்

ஆனால் இதில் மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. இதற்கிடையே பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய பாராளுமன்றத்தின் காலம் 2019-ம் ஆண்டு மே மாதம் வரை இருக்கிறது. இதற்கிடையே ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டசபை தேர்தல்கள் வருகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் என்ற முறையில் இந்த மாநிலங்களுடன் சேர்த்து பாராளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்தவேண்டி வரும். எனவே பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தலாமா? என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

28-ல் உயர்மட்ட குழு

பா.ஜனதா இந்த திட்டத்தை ரகசியமாக வைத்திருப்பதால் காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலுக்கு தயாராகுமாறு தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் பேசி வருகிறார்கள். இந்தநிலையில் பா.ஜனதா கட்சியின் உயர்மட்டக்குழு வருகிற 28-ந்தேதி டெல்லியில் கூடுகிறது. இதில் பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா மத்திய மந்திரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் பாராளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்துவது குறித்தும் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. மேலும் டெல்லி மேல்- சபையில் காலியாகும் 10 எம்.பி. பதவிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து