முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் நடைபெறும் டி-20 தொடர்: கோலி, டோனி உள்ளிட்ட ஐந்து வீரர்களுக்கு ஓய்வு?

சனிக்கிழமை, 24 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு 20 -ஓவர் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி, டோனி உள்ளிட்ட 5 மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முத்தரப்பு கிரிக்கெட்

இலங்கை, இந்தியா, வங்காளதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெறுகிறது. வரும் மார்ச் 6-ம் தேதி இந்த போட்டிகள் துவங்க உள்ளன.  இலங்கையின் 70-ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதும் நிதாஹஸ் கோப்பை டி-20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. 

பிரேமதசா மைதானத்தில்...

மார்ச் 6-ம் தேதி நடக்கும் முதல் லீக் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் 2 லீக் போட்டியில் மோதும். புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடத்தை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். இறுதிப் போட்டி மார்ச் 18-ம் தேதி நடக்கிறது. அனைத்து போட்டிகளும் கொழும்பு பிரேமதசா மைதானத்தில் நடக்கிறது.

5 வீரர்களுக்கு ஓய்வு...

தென் ஆப்பிரிக்கா தொடர் முடிந்ததும் இந்திய அணி உடனடியாக இலங்கை செல்கிறது. இலங்கை செல்லும் இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் டோனி உள்ளிட்ட ஐந்து மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தெரிகிறது. புவனேஷ்குமார், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.

ரோகித் கேப்டன்...

இலங்கை செல்லும் இந்திய கிரிக்கெட் அணி  வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படுகிறது. விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் பட்சத்தில், ரோகித் சர்மா கேப்டனாக செயல்படலாம் என கூறப்படுகிறது. டோனிக்கு ஓய்வளிக்கப்பட்டால் இளம் வீரர் ரிஷப் பாண்ட் வாய்ப்பு பெறுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து