தென்காசியில் ஜெயலலிதா பிறந்த நாள்விழா கலெக்டர், எம்.எல்.ஏ., பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2018      திருநெல்வேலி

தென்காசியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில்  நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, தென்காசி எம்.எல்.ஏ. செல்வ மோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

ஜெயலலிதா பிறந்த நாள்

தென்காசி நகராட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு தென்காசி எம்.எல்.ஏ.செல்வமோகன் தாஸ் பாண்டியன் தலைமை தாங்கினார். தென்காசி நகராட்சி ஆணையாளர் ஏகராஜ்; வரவேற்று பேசினார். விழாவில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் 3 லட்சத்து 53 ஆயிரம் செலவில் 5 மாற்றுத் திறனாளிகளுக்கு நான்கு சக்கர ஸ்கூட்டர் மற்றும் எம்.எல்.ஏ.,சொந்த நிதி மூலம் ரூ 1 லட்சம் செலவில் 12 பேர்களுக்கு சலவை பெட்டிகள், 3 பெண்களுக்கு தையல் இயந்திரம், 20 பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது. நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் தென்காசி தாசில்தார் முருகன், மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் இயக்குனரும், நெல்லை மாவட்ட அதிமுக பொருளாளருமான சண்முகசுந்தரம், முன்னாள் தென்காசி நகர்மன்றத் துணைத்தலைவர் சுடலை, தென்காசி ஒன்றிய செயலாளர் சங்கரபாண்டியன், இலஞ்சி முன்னாள் பேரூராட்சி தலைவர் காத்தவராயன், அரசு வழக்கறிஞர் கார்த்திக்குமார், வழக்கறிஞர் செல்லத்துரை, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் முருகன்ராஜ், வெள்ளப்பாண்டி, கிருஸ்ணமூர்த்தி, கசமுத்து. சுப்புராஜ், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் வெள்ளகால் ரமேஸ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து