முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பன்னிரு திருமுறை இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2018      கடலூர்
Image Unavailable

கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நேற்று காலை பன்னிரு திருமுறை விழா தொடங்கியது.

பன்னிரு திருமுறை விழா

இவ்விழா தொடர்ந்து மார்ச் 1ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. நடராஜர் கோயிலில் மக்களை இசையும், நடனமுமாக பக்தி   பரவசத்தில் ஆழ்த்தும் வகையில் பன்னிரு திருமுறை விழா நடத்தப்படுகிறது.    நேற்று காலை நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் பன்னிரு திருமுறை விழா நடராஜர் கோயில் தீட்சிதர்களின்    செயலாளர் ராஜகணபதி தீட்சிதர் தலைமையில் நடந்தது. இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா, அவர் மனைவி ராஜிவி,வெங்கடேச தீட்சிதர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தனர்.சொற்பொழிவாளர்கள் ஞானப்பூங்கோதை, அகரமுதல்வன், குடந்தை லட்சுமணன், இளையஞானி, இந்திராசவுந்திராஜன்,    பழனி வெங்கடேச ஓதுவார் ஆகியோர் திருமுறைகள் கூறி அதன் விளக்கமளித்து பேசினார்கள். வரும் 27ம் தேதி இரவு   சகிசிவம் உள்ளிட்ட பலர் சொற்பொழிவாற்றுகின்றனர்.    மார்ச் 1ம் தேதி நிறைவு நாளன்று பிரபல நாட்டிய கலைஞர் பத்மாசுப்பிரமணியத்தின் பரதநாட்டியம், இசையமைப்பளர்    இளையராஜாவின் மகள் பவதாரணியின் பாட்டு, பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட    நிகழ்ச்சிகள் நடக்கின்றன.   விழா ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் மற்றும் பிரபல இசை அமைப்பாளர் இசையமைப்பாளர்    கார்த்திக்ராஜா ஆகியோர் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து