உடுமலையில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது அமைச்சர் ராதாகிருஷ்ணன் பணிநியமன ஆணைகளை வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2018      திருப்பூர்
TIRUPUR 1n

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் உடுமலையில்,தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

வேலைவாய்ப்பு முகாம்கள்

தமிழக அரசு படித்த இளைஞர்களுக்குதகுதிக்கேற்ற பணிகளை தனியார் துறைகள் மூலம் பெற்றுத்தர வழிசெய்யும் வகையில் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட வேலைவாய்ப்புத்துறையின் மூலம் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த உத்தரவிட்டுள்ளத்தின் பேரில்,திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியில் இம்முகாமை ஏற்பாடு செய்திருந்தது. முகாமை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலையில்  தமிழக கால்நடைபராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் துவக்கிவைத்தார்.

பணிநியமன ஆணைகள்

இம்முகாமில் 75-க்கும் மேற்ப்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர்.1500-க்கும் மேற்பட்டவர்கள் வேலைக்காக நேர்காணலில் கலந்துகொண்டனர். இதில் தேர்வு செய்யப்பட 450 பேருக்கான பணி நியமன ஆணைகளை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினர். இம்முகாமில் சி.மகேந்திரன் எம்.பிவருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி,கோவை மண்டல இணைஇயக்குநர்(வேலைவாய்ப்பு) லதா,உடுமலை வருவாய் கோட்டாச்சியர் அசோகன்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மல்லிகாராணி,ஸ்ரீ ஜி.வி.ஜி.மற்றும் விசாலாட்சி கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் திலகவதி,உடுமலை தாசில்தார் தங்கவேல் தனியார்த்துறை நிறுவன அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து