முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி முதலுதவி பற்றிய விழிப்புணர்வு முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம் - இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் கிளை சார்பாக பழனி வலசை கிராமத்தில் நடைபெற்ற செய்யதம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் 60 மாணவ மாணவிகளுக்கும் மற்றும் கிராம  பொது மக்களுக்கும் முதலுதவி பற்றிய விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.  இம்முகாமினை கல்லூரியின் முதல்வர் முனைவர் ஹாஜி எஸ்.வி.எஸ். அமானுல்லா ஹமீது தலைமையில் வணிக மேலாண்மை துறை தலைவர் முனைவர் எ. அகமது அன்சாரி,   பழனி வலசை ஊர்த்தலைவர் ஆர். பூமிநாதன் மற்றும் திரு. என். முத்துக்கருப்பன் ஆகியோர் முன்னிலையில்  ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் திரு. எம். ராக்லாண்ட் மதுரம் துவக்கி வைத்து ரெட்  கிராஸ் அமைப்பின் மனித நேய செயல்பாடுகள் பற்றி விவரித்தார்  நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் ஆ. வள்ளி விநாயகம்  வரவேற்றார். பரமக்குடி கல்வி மாவட்ட ஜே.ஆர்.சி. கன்வீனரும் முதல் உதவி பயிற்றுனருமான   . எஸ். அலெக்ஸ்   மனித உடல் செயல்படும் விதம்,  முதல் உதவியின் நோக்கம் மற்றும் பயன், உயிரை பாதுகாக்கும் முறைகள், பாதிக்கப்பட்டவரை மருத்துவ மனைக்கு எடுத்துச்செல்லுதல்,  முதல் உதவியின் போது செய்யக் கூடாதவை மற்றும் மூச்சு பயிற்சி ஆகியவை பற்றி பவர் பாயிண்ட் மற்றும் செயல் முறை விளக்கம் மூலம் கற்றுக்கொடுத்து பயிற்சி அளித்தார்.
      நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் வி. யோகலட்சுமி நன்றி கூறினார். கல்லூரி நிர்வாக அலுவலர்  . சாகுல் ஹமீது மற்றும்  . சபியுல்லா ஆகியோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து