ஸ்ரீதேவி மீண்டும் பிறப்பார் -நடிக்க வருவார்: இயக்குனர் பாக்யராஜ் உருக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2018      சினிமா
k bhagyaraj 2018 01 08

சென்னை :  நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு நடிகர் மற்றும் இயக்குனர் கே.பாக்யராஜ் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்தார். ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். அதே போல் சக நடிகர்கள், நடிகைகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது குறித்து நடிகர் மற்றும் இயக்குனர் கே.பாக்யராஜ் பேசிய போது ''எப்போதும் அழகு குறையாமல் இருப்பதில் கவனமாக இருப்பார் ஸ்ரீதேவி. அதே போல் நடிப்பிலும் மிக மிக கவனமாக இருப்பார்'' என்றுள்ளார். மேலும் ''எங்களுக்குள் சண்டை வந்து இருக்கிறது. ஆனாலும் நான் சொன்னதை அப்படியே கேட்கும் நபர் அவர்.

என்னிடம் மிகவும் அன்பாக மரியாதையாக பழக கூடியவர்.'' என்றுள்ளார். மேலும் ''அவர் இப்படி திடீர் என்று சென்றது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த ஆத்மா நம்மைவிட்டு போகாது. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் மீண்டும் அவர் மகள் வயிற்றில் பிறப்பார்.மீண்டும் நடிப்பார்.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து