ரஜினி அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018      சினிமா
Karthikupuraj-Rajini

Source: provided

‘காலா’, ‘2.O’ படங்களை தொடர்ந்து அரசியலில் கவனம் செலுத்தி வரும் ரஜினியின் புதிய பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

ரஜினி நடிப்பில் தற்போது ‘காலா’ படம் உருவாகியுள்ளது. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தவிர ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘2.O’ படத்தின் படப்பிடிப்பும் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படமும் விரைவில் வெளியாக உள்ளது.


இப்படங்களில் நடித்த முடித்த பிறகு ரஜினி, தனது ரசிகர்களை சந்தித்து அரசியலில் களமிறங்க இருப்பதாக அறிவித்தார். தற்போது கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், ரஜினியின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஜினியின் அடுத்த படத்தை ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.ரஜினி அரசியல் பிரவேசம் செய்ய இருக்கும் நிலையில், புதிய பட அறிவிப்பு வெளியாகி இருப்பது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து