முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடும் வறட்சியினால் தெற்கு சூடானில் உணவைத்தேடி செல்லும் மக்கள்

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

சூடான், ஐ.நா. உலக உணவுத் திட்டத்தைச் சேர்ந்த ராஸ் ஸ்மித், “முன்னெப்போதும் இல்லாத அளவில் உணவுப்பாதுகாப்பின்மை”யை நோக்கி இந்த கிழக்கு ஆப்பிரிக்க நாடு (தெற்கு சூடான்) சென்று கொண்டிருக்கிறது என்றார்.

தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் முதல் நீரற்ற நகராக மாறுவது பற்றி செய்திகளும் எச்சரிக்கைகளும் வந்து கொண்டிருக்கும் வேளையில் தற்போது தெற்கு சூடான் உணவற்ற நிலை என்ற அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.

தெற்கு சூடான் ‘வறட்சி’ என்று அறிவித்த ஓராண்டுக்குப் பிறகு உலகின் மிக இளம் நாடு என்று அறியப்படும் தெற்கு சூடான் நாட்டு மகக்ள் தொகையில் முக்கால்வாசிப்பேர் தீவிர பட்டினிக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதில் சிவில் யுத்தம் வேறு ஒருபுறம்.

இது குறித்து ஐநா அறிக்கை ஒன்று கூறும்போது, சுமார் 60 லட்சம் மக்கள் எந்தவித உதவியுமின்றி பட்டினியில் வாட நேரிடும் அபாயமிருக்கிறது என்று எச்சரித்துள்ளது. பட்டினிச்சாவை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 40 சதவீதம்அதிகரித்துள்ளது என்கிறது இந்த அறிக்கை. மேலும் ஒரு 11 ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் 1,50,000 மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்கின்றனர்.

இது குறித்து ஐநா உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைச் சேர்ந்த ராஸ் ஸ்மித் கூறியபோது, “இதுவரை இல்லாத அளவு உணவின்மை நிலையாகும் இது” என்றார்.

மேலும் சிவில் யுத்தத்தினால் நாட்டில் உணவு தானிய உற்பத்தி படுமோசமாகச் செல்ல தெற்கு சூடானில் 3-ல் ஒரு நபர் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தெற்கு சூடானில் உள்ள உணவு மற்றும் வேளாண் ஒழுங்குமுறை அமைப்பின் ஐ.நா. பிரதிநிதி, செர்ஜ் திசோ கூறியபோது, “நிலைமை குறித்த கணிப்புகள் பயங்கரமாக உள்ளன. இப்போது நாம் புறக்கணித்தால் ஒரு பெரிய துயரத்தை எதிர்கொள்ள நேரிடும்” என்று எச்சரித்தார அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் இது குறித்து கூறிய சோல் முகி என்ற தெற்கு சூடானில் மிகப்பாதிப்படைந்த அயோத் கவுண்ட்டியைச் சேர்ந்தவர் கூறியபோது, ‘உணவைத்தேடி ஓரிடம் விட்டு ஓரிடம் சென்று தேடிக்கொண்டிருக்கிறோம்’ என்றார்.

மக்கள் கும்பல் கும்பலாக உணவுக்காக பல மைல்கள் குழந்தைக் குட்டிகளுடன் ஓரிடம் விட்டு ஓரிடம் செல்லும் கொடுமை இதில் அடங்கும். கடுமையாக ஊட்டச்சத்துக் குறைந்த தன் 1 வயது குழந்தைக்காக கிராமம் கிராமமாகச் சென்று இவர் ரேஷன் பொருட்கள் பெற்றவர்களிடம் பிச்சை எடுத்து வருகிறார். உதவிப்பணியாளர்கள் விடுக்கும் எச்சரிக்கையில், உணவு உதவி கிடைத்தாலும் கூட வரும் மே மாதம் முதல் தெற்கு சூடானில் 30 கவுண்ட்டிகளில் கடுமையான பட்டினிச்சாவுகள் ஏற்படும். அரசுப்படைகள் மற்றும் எதிர்ப்படைகள் மக்கள் உணவுப்பொருட்களை அண்ட விடாமல் தாங்களே கொள்ளை அடித்து வருவதும் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து