முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

போர்கேரா, பப்புவா நியூ கினியாவில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியது.

பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் நேற்று  சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. 35 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை.

இருப்பினும், எண்ணெய் வளம் கொண்ட பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் துரப்பன பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தகவல் தொடர்பும் சேதமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து