முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் தொடரும் அத்துமீறல்களால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியானது, பாகிஸ்தானின் ஆளுகைக்கு உட்பட்ட நிர்வாகத்தால் கவனிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், எல்லைப் பகுதியில் அண்மைகாலமாக இந்தியா, பாகிஸ்தான் படையினர் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டைகள் நடந்த வண்ணம் உள்ளது.

இதையடுத்து, தங்கள் பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து "எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனல்' பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களை, பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணியை தொடங்கும்படி, அரசு நிர்வாகிகளுக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் ராஜா பரூக் ஹேதர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, எல்லையில் நடக்கும் அத்துமீறல்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்த மக்கள் முதலில் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து அத்துமீறல்கள் நீடித்தால், இந்த பணி பிற பகுதிகளுக்கும் நீடிக்கப்படும். அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களும் வேறு பகுதிகளில் குடியமர்த்தப்படுவர் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் இந்தியாதான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாகவும் அந்தச் செய்தியில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து