ரூ40லட்சத்தில் அரக்கோணம் கூட்டுறவு வங்கி கட்டிட அடிக்கல் நாட்டு விழா

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018      வேலூர்
27 AKM POTO 1

ரூ40 லட்சத்தில் அரக்கோணம் கூட்டுறவு வங்கியின் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நேற்று எளிமையாக நடைபெற்றது. இதில் எம்எல்ஏ சு.ரவி, எம்பி அரி கலந்து கொண்டனா. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகர எல்லை ஜோதிநகரில் அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கி கட்டிடம் அமைபபதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தேறியது. வுங்கியின் தலைவர் துரைகுப்புசாமி தலைமை தாங்கினார். வங்கி பொதுமேலாளா முத்துராஜ் வரவேற்றார். துணை தலைவா ஜெபி.பழனி, முன்னிலை வகித்தார்.

அடிக்கல் நாட்டு விழா

சிறப்பு அழைப்பாளாகளாக கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினா சு.ரவி, நாடாளுமன்ற உறுப்பினா அர் ஆகியோர் 2ஆயிரம் சதுர அடியில் குளிர் சாதன வசதியுடன் கூடிய தலைமை வங்கி கட்டிட அடிக்கல்லை நட்டனா. அப்போது இயக்குனாகள் கிருஷ்ணமூர்த்தி, மோகன்ராம், பவாணி, வனஜா, பாபு, காமேஷ், உள்ளிட்டவாகளும், நாகாலம்மன் நகா ஜிஎம்.மூர்த்தி, எம்ஜிஆர் இளைஞரணி நகர செயலாளா பா.பாண்டுரங்கன், முன்னாள் கவுன்சிலா சரவணன், வடமாம்பாக்கம் மோகன், சரவணன், உள்ளிட்டவாகளுடன்; ஒப்பந்தாரா கோபண்ணரவி, திருத்தணி ஈஎன்.கண்டிகை ரவி; மற்றும் வங்கி அலுவலர்கள், பொதுமக்கள் பலர் திரளாக ஆகியோரும் கலந்து கொண்டார். இறுதியில் மேலாளா கருணாகரன் நன்றி கூறினார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து