முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளத்தில் மாநில அளவிலான கோ-கோ போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா ஓ.பி.ரவீந்திரநாத்குமார் வழங்கினார்

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018      தேனி
Image Unavailable

 தேனி - தேனி மாவட்டம் பெரியகுளம் ரோஸி வித்யாலயம் பள்ளியில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 70வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கான மாநில அளவிலான கோ-கோ போட்டிகள் கடந்த 23ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் 29 மாவட்ட அணிகள் பங்கு பெற்றன. இறுதி ஆட்டத்தில் சென்னை கிழக்கு அணியும், தேனி ரோஸி அணியும் மோதின. இதில் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் சம புள்ளிகளை பெற்றதால் முதல் பரிசை இரு அணிகளுக்கும் வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை கிருஷ்ணகிரி அணியும், மூன்றாவது  இடத்தை சிவகங்கை அணியும் பிடித்தன. சிறந்த ஆல்ரவுண்டர் கிருஷ்ணகிரி சத்யா, சிறந்த துரத்துனர் சென்னை பவித்ரா உள்ளிட்ட வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழாவில் பள்ளி தாளாளர் ஐஸ்வர்யாமுத்துகுகன் வரவேற்றார். பாசறை மாவட்ட முன்னாள் செயலாளர் ரவீந்திரநாத்குமார் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கினார் அதனை தொடர்ந்து மாநில அணி வீராங்கனைகள் அறிவிக்கப்பட்டனர். இவ்விழாவில்  மாநில கோ-கோ சங்க தலைவர் அப்பாவுபாண்டியன், கைலாசநாதர் திருக்கோவில் அன்பர் பணிக்குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப், அதிமுக நகர செயலாளர் என்.வி.ராதா, முன்னாள் பெரியகுளம் நகர்மன்ற தலைவர் ஓ.ராஜா, ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.  விமலேஸ்வரன் நன்றி கூறினார். இப்போட்டிகளுக்கான  ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து