முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்-ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முனைவர் நடராஜன் வழங்கினார்.
 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர் அம்மனுக்களை ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.  

 அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்  சார்பாக கமுதி வட்டம், கூடக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்பவரது மகள் பொன்மணி மற்றும் கடலாடி வட்டம், காவாகுளம் கிராமத்தைச் சோந்த பச்சைமால் என்பவரது மகன் பசும்பொன்சபரி ஆகிய 2 செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.6ஆயிரத்து 340-வீதம் மொத்தம் ரூ.12ஆயிரத்து 680- மதிப்பிலான காதுக்குப்பின் அணியும் காதொலிக்கருவியினையும், பட்டிணம்காத்தான் ஊராட்சி ஒன்றியம், பாரதிநகரைச் சேர்ந்த முனிஸ்வரன் என்பவரது மகள் காயத்ரி என்ற பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிக்கு ரூ.5ஆயிரம் மதிப்பிலான எழுத்துக்களை பெரிதாக்கி காட்டும் உருப்பெருக்கி கருவியினையும் என மொத்தம் 3 பயனாளிகளுக்கு ரூ.17ஆயிரத்து 680 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் வழங்கினார். நிகழ்ச்சியில்,  சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ஆ.காளிமுத்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல் , உதவி ஆட்சியர் (பயிற்சி) பி.மணிராஜ் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து