பல்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் 4 பேர் பலி

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018      சென்னை

சென்னையில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த விபத்துகளில் 4 பேர் பலியானார்கள். இது குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது

விசாரணை

கீழ்பாக்கத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 18) இவர் கோடாம்பக்கம் ஆற்காடு சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் பலத்த காயம்அடைந்தார்.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று அதிகாலை இறந்தார். இதில் தொடர்புடைய லாரி டிரைவர் வினோத்குமார் என்பரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 இதே போன்று கொடுங்கையூரை சேர்ந்த ராஜேஷ் ( வயது 27) என்பவர் பைக்கில் சென்று தடுப்பு சுவரில் மோதி காயமடைந்தார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பலியானார். மாதவரத்தில் தங்கி வேலைப் பார்த்து வந்தவர் ராஜஸ்தனை சேர்ந்த ஜகர்தீன் (வயது 38) இவர் நேற்றுமூன்தினம் 200 அடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். சோழிங்கநல்லூர் சேர்ந்தவர் பதுஷா இவர் நேற்றுமூன்தினம் வேலை முடிந்து 200 அடி சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தார். கட்டுப்பாட்டை இழந்த பைக் தடுப்பு சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாதுஷா குரோம்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை மரணமடைந்தார். இது குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து