சங்கரன்கோவிலில் கூட்டுக் குடிநீர் திட்டம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பூமி பூஜை அமைச்சர் ராஜலெட்சுமி தொடக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018      திருநெல்வேலி
minister rajalakshmi starts the new scheme boomi poojai

சங்கரன்கோவிலில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை கட்டுவதற்கான பூமி பூஜையை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி தொடங்கி வைத்தார்.

பூமி பூஜை

திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் இருந்து சங்கரன்கோவில் புளியங்குடி நகராட்சிகள், திருவேங்கடம் பேரூராட்சி,விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்,சிவகாசி,திருத்தங்கல் நகராட்சிகளுக்கு ஆற்று நீர் வழங்கும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த 08.08.2017 அன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் 110வது விதியின் அதன்படி இத் திட்டம் ரூ.543.20 கோடி மதிப்பில் செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.இத்திட்டத்தின் படி சங்கரன்கோவில் காந்திநகரில் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியும், இந்திராநகர், பாரதிநகர் பகுதியில் 2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் கட்டப்படவுள்ளது. இதில் சங்கரன்கோவில் பாரதிநகரில் கட்டப்படவுள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று காலை நடைபெற்றது. இதில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி பங்கேற்று பூமி பூஜையைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி, நகராட்சி ஆணையர் தாணுமூர்த்தி, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய துணைத் தலைவர் கண்ணன், சுகாதார அலுவலர் பாலசந்திரன், அதிமுக நகரச்செயலர் ஆறுமுகம், நெல்லை பேரங்காடி இயக்குனர் வேலுச்சாமி, இளைஞர் பாசறை அமைப்பாளர் முருகன், மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து காந்திநகர் நகராட்சித் தொடக்கப் பள்ளியில் ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடத்தையும் அமைச்சர் ராஜலெட்சுமி திறந்து வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து