நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட முதன்மை நீதிபதி துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018      நாமக்கல்
4

 

நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் அரசுத் துறைகளை ஒருங்கிணைந்து மாபெரும் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று (26.02.2018) நடைபெற்றது. இம்முகாமிற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். இம்முகாமில் நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவர் மாவட்ட முதன்மை நீதிபதி கே.ஹெச்.இளவழகன் கலந்து கொண்டு கண்காட்சி அரங்குகளைத் திறந்து வைத்து பார்வையிட்டு சட்ட விழிப்புணர்வு முகாமினைத் துவக்கி வைத்தார்.

விழிப்புணர்வு முகாம்

இம்முகாமில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, பட்டு வளர்ச்சித்துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை, பள்ளிக்கல்வித் துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட தொழில் மையம், மீன் வளத்துறை, கூட்டுறவுத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், சமூக நலத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் உட்பட பல்வேறு துறைகள் சார்பில் அரசின் திட்டங்கள் விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்தும், அதனைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

கண்காட்சி

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அரங்குகள் அமைத்துள்ளதோடு, நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாமும் இன்று நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு அரசின் திட்டங்களை அறிந்து கொண்டதோடு சட்ட விழிப்புணர்வு முகாமிலும் பங்கேற்று சட்ட விழிப்புணர்வு பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மாவட்ட சார்பு நீதிபதி செல்வி.எஸ்.அசீன்பானு, மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செல்வி.சி.மாலதி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) டாக்டர்.ஆர்.மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது).செ.பால் பிரின்ஸிலி ராஜ் குமார், தனித்துணை கலெக்டர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) மு.துரை உட்பட அனைத்து அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து