முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சில்ரன்ஸ் பவர் ஹவுஸ்

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (26.02.2018) குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சார்ந்தும், குழந்தைகள் உரிமைகள் குறித்து எடுத்துரைக்கும் விதமாகவும், குழந்தைகள் சார்ந்த பிரச்சனைகளுக்கும் உடனடியாக தீர்வு காணும் வகையில் சில்ரன்ஸ் பவர் ஹவுசை மாவட்ட ஆட்சித்தலைவர் ரோஹிணி திறந்து வைத்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பாக குழந்தைகள் உரிமைகள் குறித்து எடுத்துரைக்கும் விதமாகவும், குழந்தைகள் சார்ந்த பிரச்சனைகளுக்கும் உடனடியாக தீர்வு காணும் வகையில் சில்ரன்ஸ் பவர் ஹவுசை இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் உரிமைகள் பாதுகாத்து நமது மாவட்டத்தை குழந்தை நேய மாவட்டமாக உருவாக்கும் விதமாக சில்ரன்ஸ் பவர் ஹவுசில் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், குழந்தை பாலியல் தொந்தரவு, குழந்தை கல்வி ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்படும். இது சார்ந்த இயங்கும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குழந்தைகள் பாதுகாப்பின் ஒருங்கிணைப்பிற்காக சில்ரன்ஸ் பவர் ஹவுசில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், காவல்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாவட்ட சமூக நல அலுவலகம், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம், நேரு யுவகேந்திரா மற்றும் சைல்டு லைன் ஆகிய துறையைச் சார்ந்த 2 பணியாளர்கள் இருப்பர். பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளும் பயன்பெறும் வகையில் சில்ரன்ஸ் பவர் ஹவுஸ் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்காக ஒரு பகுதியும், ஒவியம் வரைவதற்கு ஒரு பகுதியும், கணினி மற்றும் நூலகத்திற்காக ஒரு பகுதியும், ஒதுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் தங்களின் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் குழந்தைகள் தங்களது கருத்துக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவிப்பதற்கு ஆலோசனை பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. சில்ரன்ஸ் பவர் ஹவுசை குழந்தைகள் மட்டுமல்லாது பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களும் பயன்படுத்தி குழந்தைகள் உரிமைகளை பாதுகாத்து நமது மாவட்டத்தை குழந்தை நேய மாவட்டமாக மாற்றிட ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பாக வழங்கப்படும் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் ஆதரவற்ற, தாய் தந்தையரை இழந்த, கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமையில் வாடும் குடும்பத்தில் கல்வி பயின்று வரும் குழந்தைகள் பள்ளி இடைநிறுத்தம் செய்யாமல் தொடர்ந்து கல்வி பயில 41 குழந்தைகளுக்கு மாதந்திர உதவித்தொகையாக ரூ.5,25,200க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் தத்தெடுப்பு குறித்தும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நிரந்தரமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கீழ் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகை இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரோஹிணி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.ஞானகௌரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாராமரிப்பு சார்ந்த அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து