முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவில் புதிய துணைப் பிரதமர் மைக்கேல் மெக்கார்மாக் பதவியேற்றார்

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

சிட்னி: ஆஸ்திரேலியாவின் புதிய துணைப் பிரதமராக மைக்கேல் மெக்கார்மாக் பதவியேற்றார்.

இதுவரை துணைப் பிரதமராக இருந்த பர்னபி ஜாய்ஸ் பாலியல் புகார் காரணமாக தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தைத் தொடர்ந்து காலியான இடத்துக்கு அவர் தேர்தெடுக்கப்பட்டார்.

ஆஸ்திரேலிய அரசில் அங்கம் வகிக்கும் தேசியக் கட்சியின் தலைவராக இருந்த பர்னபி ஜாய்ஸ், அந்த நாட்டின் துணைப் பிரதமராக இருந்து வந்தார்.

50 வயதாகும் இவர், தனது முன்னாள் பெண் ஊடக ஆலோசகருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகவும், அதன் காரணமாக அந்தப் பெண் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.

மேலும், தனது உதவியாளருக்காக 24 ஆண்டுகள் தன்னுடன் வாழும் மனைவியை அவர் கைவிடுவதாகவும் செய்திகள் வெளியாகின. இதன் காரணமாக, பர்னபி ஜாய்ஸுக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்ததுடன், அவர் பதவி விலக வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்தச் சூழலில், ஜாய்ஸுக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டு, பிரச்னை மேலும் தீவிரமடைந்தது. அதனைத் தொடர்ந்து, தனது பதவியை பர்னபி ஜாய்ஸ் ராஜிநாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து, போர் தியாகிகள் விவகாரத் துறை முன்னாள் அமைச்சர் மைக்கேல் மெக்கார்ரமாக்கை (53) புதிய தலைவராக தேசியக் கட்சி நேற்று முன்தினம் தேர்ந்தெடுத்தது. இதையடுத்து, அடுத்த துணைப் பிரதமராக அவர் பதவியேற்றுக்கொண்டார்.

தற்போது அந்தப் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ள பர்னபி ஜாய்ஸ், நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சிக் கூட்டணியின் பெரும்பான்மை பலத்தைப் பேணும் வகையில் தனது எம்.பி. பதவியைத் தொடர்ந்து வகிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து