முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபை தேர்தல் வாக்கு பதிவு நிறைவடைந்தது மேகாலயாவில் 47சதவீதம், நாகாலாந்தில் 67சதவீதம்

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

ஷில்லாங்/கோஹிமா: மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் நேற்று சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் மேகாலயாவில் 47 சதவீத வாக்குகளும், நாகாலாந்தில் 67 சதவீத வாக்குகளும் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் நேற்று சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 3 மணிக்கு முடிந்தது.

தலா 60 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் தலா 59 தொகுதிகளுக்கு மட்டும் நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த இரு மாநிலங்களில் மேகாலயாவில் இதுவரை பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில்லை. எனவே இந்த முறை ஆட்சியை பிடித்து விட்டால் முதல் முறையாக பா.ஜ.க ஆட்சி என்ற பெருமை கிடைக்கும். ஆனால் நாகாலாந்தில் அங்குள்ள மாநில கட்சியுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க ஆட்சியில் ஒட்டிக் கோண்டது. தற்போதும் அதே பாணியில் மற்றொரு மாநில கட்சியுடன் பா.ஜ.க தேர்தலை சந்தித்துள்ளது.

இதனால் காங்கிரஸ் கட்சியுடன் போட்டி போட்டிக் கொண்டு பா.ஜ.க பிரசாரம் செய்தது, இரு மாநிலங்களிலும் கடந்த 25-ஆம் தேதியுடன் பிரசாரங்கள் ஓய்ந்தன. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 3 மணிக்கு முடிவடைந்தது.

மேகாலயாவில் மாலை 3 மணி வரை 47 சதவீத வாக்குகளும், பதிவாகியிருந்தது. நாகாலாந்து வாக்கு பதிவின்போது ஏற்பட்ட வன்முறையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். திரிபுரா மற்றும் மேற்கண்ட இரு மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. நாகாலாந்தில் முதல் முறையாக பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மேகாலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து