முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் தினமும் 5 மணிநேரம் போர் நிறுத்தம்: ரஷ்ய அதிபர் புடின் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ் : சிரியாவில் தினமும் 5 மணிநேரம் போர்நிறுத்தம் செய்யவேண்டும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் சிரியா முழுவதும் 30 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய வார இறுதியில் ஒருமனதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. 

சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்களின் கிழக்கு கூட்டா பகுதி மீது அதிபர் ஆதரவு படை நடத்திய தாக்குதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் பச்சிளம் குழந்தைகள். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. இதையடுத்து சிரியாவின் கிழக்கு கூட்டாவின் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதியில் தினமும் ஐந்து மணிநேரம், தாக்குதலை நிறுத்தி வைக்க ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். இந்த போர் நிறுத்தம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து