முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி போல் மிமிக்ரி செய்து காட்டிய அதிபர் டிரம்ப்

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், இந்தியப் பிரதமர் மோடியை மிகச் சிறந்த மனிதர் என்று புகழ்ந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவர் பேசுவது போல பேசி மிமிக்ரி செய்து காட்டினார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் இரு சக்கர வாகனங்களுக்கு அமெரிக்காவில் வரி நிர்ணயிக்கப்படாத நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் ஹார்லே-டேவிட்சன் இரு சக்கர வாகனங்களுக்கு இந்தியாவில் 100 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் அனைத்து மாகாண கவர்னர்கள் முன்னிலையில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

மிகவும் சிறந்த மனிதர் என்று நான் கருதும் அந்த பிரதமர், என்னை அழைத்து என்னிடம், அமெரிக்க இரு சக்கர வாகனங்களுக்கு 50 சதவீத வரியை குறைப்பதாக உறுதி அளித்தார். நானும் அதற்கு சரி என்றேன். ஆனால் இன்றுவரை எதுவும் கிடைக்கவில்லை என்று கூறினார். பிறகு, பிரதமர் மோடி கூறுவது போல தனது கையை பிடித்துக் கொண்டு, மிகவும் தாழ்ந்த, பணிவான குரலில், அவர் அதை அழகாகக் கூறினார், அவர் மிகவும் அழகான மனிதர், அவர் என்னிடம் கூறினார், தற்போது அந்த வரியை 75 சதவீதமாக குறைத்திருப்பதாகவும், விரைவில் அதனை 50 சதவீதமாக குறைப்பதாகவும் கூறினார். அதற்கு நான் ஹா என்று கூறினேன். வேறு என்ன சொல்ல?" என்று மோடி பேசுவது போல பேசிக் காட்டினார். ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ஊடகங்கள் முன்னிலையில் பேசிய டிரம், இந்திய பாணியில் மோடி பேசுவதைப் போல பேசிக் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து