கீழடி அகழ்வாராய்ச்சி 4 வது கட்ட பணிக்கு தமிழக அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் மாபா.பாண்டியராஜன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2018      திருநெல்வேலி

கீழடி அகழ்வாராய்ச்சியில் 4வது கட்ட பணி மேற்கொள்ள தமிழக அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என குற்றாலத்தில்  அமைச்சர் மாபா.பாண்டியராஜன் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

ரூ.1 கோடி ஒதுக்கீடு

நெல்லை மாவட்டம்  தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி சட்டமன்ற உறுப்பின் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் ஸ்ரீதர் நாராயணன், மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் இயக்குனரும், மாவட்ட அதிமுக பொருளாளருமான சண்முகசுந்தரம், முன்னாள் தென்காசி நகர்மன்ற துணைத்தலைவர் சுடலை, தென்காசி ஒன்றிய செயலாளர் சங்கரபாண்டியன், அரசு வழக்கறிஞர் கார்த்திக்குமார், வழக்கறிஞர் செல்லத்துரை, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் முருகன்ராஜ், வெள்ளப்பாண்டி, கிருஸ்ணமூர்த்தி, கசமுத்து. சுப்புராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  கூட்டத்திற்கு முன்னதாக குற்றாலத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது :-முதல்வரின் கோரிக்கையை தொடர்ந்து மத்திய அமைச்சர் நிதின்கட்காரி ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தமிழகத்திற்கு அறிவித்தார்;. உச்ச நீதிமன்றத்தின் உத்திரவுப்படி காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பிரதமரிடம் தமிழக முதல்வர்  கோரிக்கை மனு அளித்துள்ளார். தமிழகத்துக்கு காவிரி நீர் தேவையில்லாத போது அங்கு உபரியாக வெளியேறிவரும் நீரை கணக்கில் கொள்ளக்கூடாது. எப்போது நமக்கு தேவையோ அப்போது வழங்க வேண்டும இதில் தாமதமின்றி நடவடிக்கைகளை  மேற்கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் நீர் நமக்கு வேண்டும்.கீழடி அகழ்வராய்ச்சியை 3 –வது கட்டமாக மத்திய அரசு ஆய்வு செய்து உள்ளது. 4-வது கட்ட ஆய்வுக்கு தமிழக அரசு எந்த இடங்களை தோண்ட வேண்டும் என்று 4 இடங்களை தேர்வு செய்துள்ளது. இதுவரை மத்திய அரசு செயல்படுத்தி வந்ததை  விட்டு விட்டு சென்றுவிட்டனர். மத்திய அரசு இந்த திட்டத்தை  கைவிட்டாலும்  4வது கட்ட ஆய்வை மேற்கொண்டு தமிழக அரசு செயல்படுத்தும். அதற்காக 1கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் 2 கோடி ரூபாய் கேட்க்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா தளமான குற்றாலத்தில் உள்ள அகழ் வைப்பகத்தை சீரமைக்க  நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து