முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்ரா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.22கோடி கடன் உதவி ராமநாதபுரத்தில் மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகரில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் பாண்டியன் கிராம வங்கி ஆகியவற்றின் சார்பாக, முத்ரா திட்டத்தின் கீழ் நடைபெற்ற மாபெரும் கடன் வழங்கும் விழாவில், மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் ஆகியோர், மொத்தம் 7ஆயிரத்து 921 பயனாளிகளுக்கு ரூ.22.51 கோடி மதிப்பிலான கடனுதவிகளை கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்கள். அப்போது மத்திய மந்திரி பேசியதாவது:- இந்திய தேசத்தினை உலகளவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் முன்னோடி தேசமாக உருவாக்கிட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் பாரதப்பிரதமர்  பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றார். குறிப்பாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் நிலையில், அந்த வளர்ச்சியானது  நாட்டில்  உள்ள  125  கோடி மக்களுக்கும் முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் வங்கி கணக்குகள் இல்லாத ஏழை, எளிய மக்கள் அனைவரும் புதிய வங்கி கணக்குகள் துவங்கிடும் வகையில் ஜன் தன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தின் கீழ் தேசிய அளவில் இதுவரை ஏறத்தாழ  31 கோடி புதிய வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன.
 மேலும் தேசிய அளவில் ஆண்டொன்றிற்கு சராசரியாக 5 இலட்சம் சாலை விபத்துகள் ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. சாலை விபத்துகளில் சிக்கும் பொதுமக்களின் நலனைப் பாதுகாத்திடும் வகையில் பிரதான் மந்திரி பீமா சுரக்ஷா யோஜனா என்ற விபத்து காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதுதவிர இளைஞர்களுக்கு புதிதாக தொழில் துவங்க பல்வேறு திறன்வளர்ப்பு பயிற்சிகளும், வங்கி கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் இணை பிணையம் இல்லாத வங்கிக் கடன்களாக முத்ரா திட்டத்தின் மூலம்; சிசு  திட்;டத்தின் கீழ் ரூ.50ஆயிரம் வரையிலும், கிஷோர் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலும், தருண் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரையிலும் கடனுதவிகள் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
 இத்திட்டத்தின்; கீழ் இன்றைய தினம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் பாண்டியன் கிராம வங்கி ஆகியவற்றின் சார்பாக மொத்தம் 7921 நபர்களுக்கு ரூ.22.51 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்படுகிறது.  இத்திட்டத்தின் கீழ் தேசிய அளவில் கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை சுமார் 10 கோடி நபர்களுக்கு ஏறத்தாழ ரூ.5 லட்சம் கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு பேசினார்.
இவ்விழாவில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. குறிப்பாக ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு விலையில்லாமல் 8 கிராம் தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு நிதியுதவியாக ரூ.18ஆயிரம் வழங்கும் திட்டம், மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் போன்ற எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 
 அந்த வகையில் மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைப்போடு புதிதாக தொழில் துவங்க விரும்பும் ஏழை, எளியோருக்கு இணை பிணையம் ஏதுமின்றி கடனுதவிகள் வழங்கிடும் வகையில் முத்ரா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2016-2017ஆம் நிதியாண்டில் 61,482 பயனாளிகளுக்கு ரூ.190.69 கோடி மதிப்பிலும், 2017-2018ஆம் நிதியாண்டில்  இதுவரை 53,488 பயனாளிகளுக்கு ரூ.185.83 கோடி மதிப்பிலும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.  இன்றைய தினம் நடைபெறும் இவ்விழாவில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் பாண்டியன் கிராம வங்கி ஆகியவற்றின் சார்பாக மொத்தம் 7921 நபர்களுக்கு ரூ.22.51 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்படுகிறது.   இதுதவிர தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பாக நடப்பு நிதியாண்டில் பல்வேறு திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 
மேலும் வருகின்ற மார்ச் 3 மற்றும் 4ஆம் நாட்களில் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.  இம்முகாமில் பல நிறுவனங்கள் வாயிலாக பொறியியல் பட்டதாரிகளையும் மற்றும்; மாநிலத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட பிரபலமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான நபர்களைத் தேர்வு செய்யவுள்ளனர். மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமினை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார். 
 இவ்விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின்  தூத்துக்குடி  முதன்மை மண்டல மேலாளர் பி.உமாமகேஸ்வரி, பாண்டியன் கிராம வங்கி தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) கோ.குருநாதன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ப.மாரியம்மாள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆர்.சியாமளாநாதன்,  பாரத மாநில வங்கி மண்டல மேலாளர் சேகர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் குணசேகரன், பாண்டியன் கிராம வங்கி மேலாளர் தெய்வநாயகம் உள்பட அரசு அலுவலர்கள், வங்கி மேலாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து