திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா சுவாமி சண்முகர் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2018      தூத்துக்குடி
thiruchenthur murugan temple masi thiruvizhaa

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா 8ம் திருவிழாவான நேற்றுபகலில் சுவாமி சண்முகர் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. சிகர நிகழ்ச்சியாக வரும் மார்ச் ஒன்றாம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

மாசி திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்மன் தனித்தனி சப்பரத்தில் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வதி உலா நடந்தது. இத்திருவிழாவின் முக்கிய நிaகழ்ச்சியாக நேற்று சுவாமி சண்முகர் உருகு சட்டசேவை நடந்தது. மாலையில் சுவாமி சண்முகர் தங்கசப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா வந்து அதிகாலை வெகுபாஷா மண்டபத்தில் வந்து சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.மாசி திருவிழாவின் 8ம் திருவிழாவான நேற்றுஅதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. பின்னர் சுவாமி சண்முகர் சிவன் கோயிலை  சேர்ந்தார். அங்கு சுவாமி சண்முகருக்கு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. பகல் 11.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை பட்டு உடுத்தி மரிக்கொழுந்து மணம் வீச பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா வந்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பச்சை பட்டு திருக்கண் சாத்தி வழிப்பட்டனர். மாசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 5.30 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. முதலில் விநாயகர் தேரும், பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய தேரும், தெய்வானை அம்மன் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கின்றனர். 11ம் திருவிழாவையட்டி வரும் 2ம் தேதி இரவு தெப்பகுளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. 12ம் திருவிழாவான வரும் மார்ச் 3ம் தேதி சுவாமி, அம்பாள் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.  ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் மற்றும் இணை ஆணையர் பாரதி ஆகியோர் செய்துள்ளனர்.

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து