முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வல்லம் ஒன்றிய அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2018      விழுப்புரம்
Image Unavailable

வல்லம் ஒன்றிய அதிமுக சார்பில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

செல்லபிராட்டியில் நடைபெற்ற விழாவிற்கு வல்லம் ஒன்றிய அதிமுக செயலர் கு.விநாயகமூர்த்தி தலைமை வகித்தார். அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு இலவச மின்அடுப்பு மற்றும் பெண்களுக்கான சமையல் பாத்திரங்களை வழங்கி சிறப்பரையாற்றினார். விழாவில் ஆரணி நாடாளும்மன்ற உறுப்பினர் வெ.ஏழுமலை, வல்லம் முன்னாள் ஒன்றியகுழு தலைவர் கா.அண்ணாதுரை, துணை தலைவர் பரிமளா பன்னீர்செல்வம், ஒன்றிய பொருளர் மனோகரன், களவாய் சேகர், தமிழ்ச்செல்விரமேஷ், கீதாசெல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வல்லம் ஒன்றிய அதிமுக சார்பில் நல திட்ட உதவிகளை வழங்கி பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம். இங்கு பெண்கள் அதிக அளவில் வருகை தந்ததை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஏன் என்றாள் ஜெயலலிதா தீட்டிய திட்டங்கள் அனைத்தும் பெண்களை மையமைக கொண்டே திட்டமிடப்பட்டது.தற்போது ஸ்கூட்டர் திட்டமும் பெண்களுக்காக ஜெயலலிதா திட்டமிட்டு நிதி ஒதுக்கி சென்றுள்ளார். திடீரென தன் பேச்சை நிறுத்திய அமைச்சர் ஓலி ஓளி அமைப்பவரிடம் ஜெயலலிதா கடைசியாக சட்ட சபையில் பேசிய நான் இல்லா என்றாலும் இந்த கழகம் ஆயிரம் ஆண்டுகள் இருக்கம் என்ற பேச்சை போடு மாறு கேட்டுக்கொண்டார். உடனே சட்டசபையில் கடைசியாக ஜெயலலிதா பேசிய பேச்சு ஒலிபரப்பட்டது. அந்த பேச்சை கேட்டதும் அமைச்சர் கண்கலங்கினார். இதை பார்த்த மற்ற அதிமுகவினரும் கண்கலங்கினர். சற்று நேரம் அங்கு நிசப்தம் நிலவியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து