தமிழகத்தில் கவர்னருக்கு கறுப்புக் கொடி காட்டும் திமுக புதுவையில் வெண்சாமரம் வீசுகிறது அதிமுக எம்எல்ஏ அன்பழகன் கிண்டல்

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2018      புதுச்சேரி

புதுவை சட்டமன்ற அதிமுக கட்சித் தலைவர் அன்பழகன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்.எல்.ஏ.பேட்டி

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை புதுவை மாநில வளர்ச்சிக்கு நாராயணசாமி தமைமையிலான  காங்கிரஸ் ஆட்சி பயன்படுத்த தவறிவிட்டது. பிரதமர் வருகை பற்றிய விபரம் தெரிந்வுடன் புதுவைக்கு தேவையான திட்டங்கள், கூடுதல்நிதி, வளர்ச்சி திட்டங்கள ஆகியவை தொடர்பாக எந்த கோரிக்கையும் பிரதமரிடமோ, பிரதமர் அலுவலகத்திலோ புதுவை அரசு சமர்ப்பிக்கவில்லை. புதுவை அரசின் நிர்வாக கோளாறு, உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது, சுற்றுலாவை மேம்படுத்தாதது ஆகியவை குறித்து பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பட்டார். இது தொடர்பான ஆக்கபூர்வமான செயல்களை முன்னெடுத்து செல்ல வேண்டியது நாராயணசாமியின் தலைமையிலான அரசின் பொறுப்பு. ஆனால் நாராயணசாமி பிரதமர் டெல்லி சென்றடையும் முன்பே அவருக்கு பதிலளிக்கிறார். நாராயணசாமி மாநில முதல்வராக ஒருபோதும் செயல்படுவதே இல்லை. ஒரு கட்சித்தலைவர் போலவே செயல்படுகிறார். அதோடு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் போலவும்செயல் படுகிறார். ஏற்கனவே அறிவித்த திட்டங்களை செயல்படுத்த வில்லை. தற்போது நடைமுறையில் இருந்த திட்டங்களிலும் காங்கிரஸ் அரசு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. பொது விநியோக திட்டம் முற்றிலும் சீரழிந்துள்ளது. ரேஷன் கார்டுக்கும், அரசுக்கும் இலவச அரிசி வழங்குவதில் மட்டும் தான் உறவு உள்ளது. இப்போது அந்த உறவும் முறியும் போல உள்ளது. கடந்த 19 மாத காங்கிரஸ் ஆட்சியல் 6 மாதம் மட்டும்தான் இலவச அரிசி வழங்கப்பட்டது. தற்போது மஞ்சள் ரேஷன் கார்டுக்கு அரிசி கிடையாது என அறிவித்துள்ளது. இதற்காக அனைத்து ரேஷன் கடைகளிலும் சிவப்பு கார்டை முறைப்படுத்த புதிய விதிமுறைகளை வகுத்துள்ளனர்.  இந்த விதிமுறை மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரானது.மத்திய அரசு மாநிலத்தில் மொத்தமுள்ள குடும்பத்தில் 62.5 சதவிகிதத்தினரை உணவு பாதுகாப்பு சட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளது. இதன்படி புதுவையில் உள்ள 3 லட்சத்து 39 ஆயிரத்து 156 ரேஷன் கார்டுகளில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 870 கார்டுகளை சிவப்பு ரேஷன் கார்டுகளாக அறிவிக்க வேண்டும். ஆனால ;இதற்கு எதிர் மாறாக புதுவை அரசு சிவப்பு கார்டுகளை மஞ்சள் கார்டுகளாக மாற்றும் முயற்சியில் இறங்கி உள்ளது. கவர்னரின் உத்தரவின் பேரில் இதற்கான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி மாகி ஏனாமில் நடைபெறவில்லை. புதுவையில் மட்டும் தான் இதை செயல்படுத்தி வருகின்றனர்.கவர்னருக்கு எதிராக செயல்பட்டு வந்த காங்கிரஸ் அரசு திடீரென திசைமாறி அவரிடம் சரணடைந்துள்ளது. என்ன காரணம்  என்று தெரியவில்லை. இதேபோல தமிழகத்தில் கவர்னர் செல்லும் இடங்களில் எல்லாம் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தும் திமுக புதுவையில் கவர்னருக்கு வெண்சாமரம் வீசம் வேலையை செய்து வருகிறது. மத்திய அரசின் பிரதமர் வீடு கட்டும் திட்ட மானியத்தில் வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உள்ளது. ஆனால் புதுவையில் வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உள்ளது. இந்த குளறுபடிகளை நீக்க எம்எல்ஏக்களின் கூட்டத்தை கூட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களின் கருத்துக்களை அறிந்து ரேஷன் கார்டுகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து