முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ: சேலத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

Source: provided

சேலத்தில் சாலை பாதுகாப்பு வலியுறுத்தி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பொது மக்கள் இடையே கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர் ...மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் கலைக்குழுவினர் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடனம் ஆடிய நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.... அதிகரித்து வரும் விபத்துகளை தடுக்கவும் வாகன ஒட்டிகள் சாலை பாதுகாப்பு மதிக்க வேண்டுமென வலியுறுத்தியும் சேலத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கலைக்குழுவினர் முலம் சேலம் மாநகர மக்களிடையே புதுமையான நடனம் ஆடியும்இ பாட்டு பாடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானாஇ அன்னதானப்பட்டிஇ பழைய பேருந்து நிலையம்இ புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பொது மக்கள் மத்தியில் சாலை விதிகளை பாடலாகளாக இசையமைத்து பாடலுக்கு எற்றவாறு இ நடனம் ஆடி அசத்தியது பொதுமக்களிடையே வெகுவாக கவர்ந்தது. இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் கதிரவன் கூறுகையில் சாலை விதிகளை மீறுவதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது எனவே பொது மக்கள் எளிதாக அறியும் வகையில் கலைக்குவினரை கொண்டு கலை நிகழ்ச்சி முலம் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம். வாகன ஒட்டிகள் சாலை விதிகளை கடைபிடித்து விபத்துகளை ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பேட்டி – கதிரவன். சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து