கார்த்தி சிதம்பரம் கைது: பா.ஜ.கவின் திசை திருப்பும் அரசியல் என காங். விமர்சனம்

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2018      அரசியல்
Priyanka Chaturvedi 2018 02 28

புது டெல்லி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை, பா.ஜ.கவின் திசை திருப்பும் அரசியல் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கூறியதாவது,

நரேந்திர மோடி அரசு வழக்கமான தந்திர அரசியலை கையாள்கிறது. தற்போது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இந்த அரசு மீது தினந்தோறும் புதிய புதிய ஊழல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அடுத்தடுத்து வங்கி மோசடிகள் நடந்த வண்ணம் உள்ளதால் மத்திய அரசு மீது மக்கள் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனை திசை திருப்பவே தற்போது கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ கைது செய்துள்ளது.பா.ஜ.கவின் பழிவாங்கும் அரசியல் தொடர்கிறது. மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை, எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்கும் பா.ஜ.கவின் நடவடிக்கையே இது. இவ்வாறு பிரியங்கா சதுர்வேதி கூறியுள்ளார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து