காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு மையத்தில் கலெக்டர் சி.அ.ராமன் ஆய்வு

வியாழக்கிழமை, 1 மார்ச் 2018      வேலூர்
ph vlr 1 a

 

தமிழகம் முழுவதும் 2017-18 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நேற்று (01.03.2018) துவங்கியது. வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு மகளிர் மேல்நலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை மாணவ மாணவிகள் எழுதுவதை கலெக்டர் சி.அ.ராமன், பார்வையிட்டார்.

கலெக்டர் பார்வையிட்டார்

வேலூர் கல்வி மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 171 பள்ளிகளில் பயிலும் 9519 மாணவர்களும், 11398 மாணவியர்களும் 84 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 184 பள்ளிகளில் பயிலும் 9761 மாணவர்களும், 10783 மாணவியர்களும் 70 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். தேர்வெழுதும் மாணவர்களில் மாற்றுத் திறனாளிகளாக வேலூர் மாவட்த்தில் 44 மாணவர்கள் சொல்வதை எழுதுபவர்களாகவும், 40 மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்வு பணிகளில் 154 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 154 துறை அலுவலர்களும், 2250 அறை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வுகளை கண்காணிக்க 250 பறக்கும் படை உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மைய வளாகத்தில் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். மேலும், அரசுத் தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ள அனைத்து விதிமுறைகளையும் தேர்வர்கள் மற்றும் தேர்வு பணியில் ஈடுபடுபவர்கள் தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாணவர்கள் தேர்வு மையத்திற்கு உரிய நேரத்தில் செல்வதற்கு பேருந்து வசதியும், தேர்வு நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்கவும் மற்றும் அனைத்து தேர்வு மையங்களுக்கும் காவல் துறையின் பாதுகாப்பும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் மற்றும் தேர்வு மைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து