கடலூர் திருப்பாதிரிபுலியூரில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்தினை கலெக்டர் வே.ப.தண்டபாணி, , நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வின்போது கலெக்டர் வே.ப.தண்டபாணி, , தெரிவித்ததாவது.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு
கடலூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கியுள்ளது. இம்மாவட்டத்தில் 30,570 மாணவ மாணவிகள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதுகிறார்கள். இதில் 210 பள்ளிகளில் இத்தேர்வு நடைபெறுகிறது. இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 94 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இதில் தனித்தேர்வர்களின் எண்ணிக்கை 1503 ஆகும். மேலும் கடந்த ஆண்டு 31,527 மாணவ மாணவிகள் இத்தேர்வினை எழுதினார்கள். நடப்பாண்டில் ஒப்பிட்டு பார்க்கும்போது இன்று நடைபெறும் இத்தேர்வில் 957 நபர்கள் குறைவாக உள்ளனர். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளை கண்காணிக்க 240 பறக்கும்நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க 94 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இப்பொது தேர்வு நடைபெறுவதற்கு பாதுகாப்பு வசதிகளும், அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு தேர்வு அமைதியான முறையில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் மூலம் செய்யப்பட்டுள்ளது என சய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.இராஜேந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஆர்.முருகன், என்.எஸ்.எஸ் மாவட்ட தொடர்பு அலுவலர் சி.திருமுகம், பறக்கும் படை உறுப்பினர் பி.ஜோதிபிரியா ஆகியோர் உடனிருந்தனர்.