முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, வண்ணமயமாக ஹோலிப் பண்டிகை நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் நாட்டு மக்களுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பக்த பிரகலாதன் கதையுடன் தொடர்புடையது ஹோலிப் பண்டிகை. ஸ்ரீமன் நாராயணனின் நாமத்தையே உச்சரித்த பக்த பிரகலாதனை கொல்வதற்காக இரணியனின் தூண்டுதலால் ஹோலிகா என்ற அரக்கி ஏவப்படுகிறாள். அடுத்தவருக்கு துன்பம் அளிக்கக் கூடாது என்றுதான் பிரம்மா ஹோலிகாவுக்கு பெரும் சக்திகளை அளித்திருந்தார்.

பிரகலாதனை மடியில் அமர்த்தி ஹோலிகா தீயில் இறங்க முயன்றாள். ஆனால் ஹோலிகா தர்மத்ததை மறந்ததால் திருமால் ஹோலிகாவின் ஆடையில் இருந்த அவளது சக்திகளை வேகமான காற்றால் அபகரித்து, பிரகலாதன் மீது போர்வையாய் போர்த்தி தீயில் இருந்து தடுத்தாட்கொண்டார். ஹோலிகா தீயில் கருகிப் போனாள். இதனையொட்டி வண்ணமயமாக ஹோலிப் பண்டிகை வடமாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

வட இந்திய மக்களால் உற்சாகமாக நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை தினமான நேற்று ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை பூசியும், மலர்களைத் தூவியும், வண்ண பலூன்களை பறக்கவிட்டு, வண்ண நீரைப் பாய்ச்சியும் ஆண்களுடன் பெண்களும் குழந்தைகளும் உற்சாகமாக வண்ணமயமாக ஹோலி பண்டிகையை கொண்டாடினர். இதையடுத்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அனைவருக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து