முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செம்மரம் வெட்ட சென்றதாக கூறி திருப்பதி அருகே 84 தமிழர்கள் கைது

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

திருப்பதி, செம்மரம் வெட்டச் சென்றதாகக் கூறி லாரியில் சென்ற 3 பட்டதாரி இளைஞர்கள் உள்பட 84 தமிழர்களை ஆந்திர மாநிலத்தின், செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

இது குறித்து செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் தரப்பில் கூறுகையில், (நேற்று) அதிகாலை வழக்கமான சேசாலம் வனப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தோம். அப்போது, ஒரு லாரி தார்பாய் போட்டு மூடப்பட்ட நிலையில் ரேணிகுண்டாவில் இருந்து கடப்பா செல்லும் சாலையில் சென்றது. அதை ஆஞ்சநேயபுரம் சோதனைச் சாவடிப் பகுதியில் தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தபோது, அதற்குள் 84 பேர் இருந்தனர். இந்த லாரி தமிழகத்தின் ஆற்காடு பகுதியில் இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அனைவரும் தமிழர்கள் எனவும் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தனர். இந்த 84 பேரில் 3 பேர் பட்டதாரி இளைஞர்கள் என்றும் தெரிவித்தனர். அவர்கள் அனைவரையும் கைது செய்து திருப்பதி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறோம் எனத் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து