மணிரத்னத்துக்கு வாழ்நாள் சாதனை விருது: முதல்வர் சித்தராமையா வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      சினிமா
Manirathnam award Siddaramaiah 2018 03 02

பெங்களூரு, பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா வாழ்நாள் சாதனையாளர் விருதை இயக்குநர் மணிரத்னத்துக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா வழங்கினார்.

10-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா கடந்த 22-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. 68 நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் பங்கேற்ற இவ்விழாவில் 2 தமிழ் படங்கள் மட்டுமே திரையிடப்பட்டன. ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய ‘டூ -லெட்’ திரைப்படத்துக்கும், பிரசன்னா ராமசாமி இயக்கிய ‘அசோக மித்ரன்’ ஆவணப்படத்துக்கும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழா முதல்வர் சித்தராமையா தலைமையில், கர்நாடக சட்டப்பேரவை அமைந்துள்ள விதான சவுதா வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. கன்னட திரையுலக நடிகர், நடிகைகளின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதையடுத்து சித்தராமையா, பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவின் வாழ்நாள் சாதனையாளர் விருதை இயக்குநர் மணிரத்னத்துக்கு வழங்கினார். கர்நாடக அரசின் கவுரவ பரிசுப் பொருட்கள், விருது பட்டயம், ரூ.10 லட்சம் பரிசுத் தொகை ஆகியவையும் வழங்கப்பட்டன.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து