முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருஉத்திரகோசமங்கையில் விதை சுத்திகரிப்பு நிலையம் கலெக்டர் நடராஜன் நேரில் ஆய்வு செய்தார்

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், திருஉத்திரகோசமங்கையில் வேளாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும்  விதை சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கலெக்டர் முனைவர் நடராஜன் ஆய்வு செய்தார்.

 ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தரமான விதைகளை பெற்று பயன்பெறும் வகையில் வேளாண்மைத்துறை, விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறை ஒருங்கிணைப்புடன் விதைப்பண்ணைகள் அமைத்தல் மற்றும் சான்று விதை கொள்முதல் தொடர்பான விதை விதைச்சான்று நடைமுறை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ்; மாவட்டத்தில் தரமான விதைகளை  உற்பத்தி செய்திட ஏதுவாக 252 ஆர்வமுள்ள விவசாயிகளை பதிவு செய்து  நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களில் 723.14 ஹெக்டேர் பரப்பளவில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது.
 கடந்த ஆண்டில் இயல்பாக கிடைக்கப் பெறும் மழை அளவை காட்டிலும் 27 சதவீதம் குறைந்த அளவு மழையளவு பதிவான போதிலும்,  விதைப்பண்ணை விவசாயிகள்; கிணற்றுநீர் பாசனவசதி மற்றும் பண்ணைக் குட்டை பாசனவசதி போன்றவற்றைப் பயன்படுத்தி போதிய அளவு மகசூல் எடுத்துள்ளனர். இவ்வாறு விதைப்பண்ணை விவசாயிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் விதைகள் அருகில் உள்ள விதை சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு விதை சுத்திகரிப்புபணி, ஈரப்பதம் மற்றும் மிதவை பரிசோதனை உள்ளிட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு தர ஆய்வு செய்யப்படுகிறது. இத்தகைய தர ஆய்வுகளின் இறுதியில்  சம்பந்தப்பட்ட விதைச்சான்று அலுவலர்கள் சான்றொப்பம் வழங்குவார்கள்.  இதன் மூலம் வறட்சியைத் தாங்கி குறைந்த நீரில் அதிக மகசூல் வழங்கிடும் வகையிலான தரமான விதைகள் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
 மேலும் தற்பொழுது மாவட்டத்தில் சிறுதானிய பயிர்களின்; சாகுபடியை ஊக்கப்படுத்தும் பொருட்டு முதன்முறையாக குதிரைவாலி, கேழ்வரகு, சோளம், கம்பு மற்றும் தினை ஆகிய சிறுதானிய பயிர்களில் 52 எக்டேர் பரப்பளவில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டு 30 மெ.டன் விதைக்குவியல்கள் சுத்திகரிப்புபணி மேற்கொள்ள  சான்றட்டை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
 ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில்  திருஉத்திரகோசமங்கை கிராமத்திலும், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில்  கல்லூர் கிராமத்திலும் மற்றும் பரமக்குடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் என மூன்று இடங்களில்; வேளாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் விதைசுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு  வருகிறது. திருப்புல்லாணி ஊராட்சி  ஒன்றியம், திருஉத்திரகோசமங்கையில் இயங்கி வரும் விதை சுத்திகரிப்பு நிலையத்தில் விதை சுத்திகரிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராசன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்பிறகு, விதைப்பண்ணைபதிவு, சான்று விதைகள் கொள்முதல் ஆகிய திட்டங்கள் குறித்து மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடத்தில் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என செய்தியாளர் சுற்றுப்பயணத்தின் போது அலுவலர்களிடத்தில் அறிவுறுத்தினார். இந்தஆய்வின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்  (வேளாண்மை) பி.ராஜா, வேளாண்மை துணை இயக்குநர் மாநிலத்திட்டம் சொர்ணமாணிக்கம்,  விதைச்சான்று உதவி இயக்குநர் எஸ்.எஸ்.சேக் அப்துல்லா வேளாண் அலுவலர் அம்பேத்குமார், திருப்புல்லாணி வட்டார வேளாண்மை உதவி  இயக்குநர் அழகேசன், விதைசுத்திகரிப்பு நிலைய வேளாண்மை அலுவலர் மீனா உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து