முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களின் உயர்வுக்கும், பாதுகாப்புக்கும் ஏராளமான திட்டங்கள் மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் உமையாள் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      தேனி
Image Unavailable

தேனி - பெரியகுளம் அருகே தனியார் மகளிர் கல்லூரியில் நேற்று முன்தினம் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பெண்கள் அமைப்பு தலைவி டாக்டர் மரியஜெஸ்லி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் உமையாள் பெண்களின் உயர்வுக்கும், பாதுகாப்பிற்கும் உள்ள திட்டங்கள் குறித்து விளக்கவுரையாற்றினார். அவர் பேசும்போது, மாணவிகளாகிய நீங்கள் பெற்றோரின் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்து மனதை சிதறவிடாமல் படித்து நல்ல நிலைக்கு உயர வேண்டும். மேலும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்று சமூகத்தில் பெண்களுக்கு வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறை உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகள் உள்ளன. அவற்றையெல்லாம்  தைரியத்துடன் எதிர்கொள்ள நம்மை தயார்படுத்தி கொள்ள வேண்டும். பெண்களுக்காக அரசும் நல்ல பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் வரதட்சணை தடுப்பு சட்டத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆலோசனைகள் வழங்குதல், பிரிந்த தம்பதிகளை சேர்த்து வைத்தல், வரதட்சிணை பொருட்களை மீட்டு கொடுத்தல் குறித்தும், குடும்பங்களில் வன்முறையை தடுப்பதன் மூலம் பெண்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான பாதுகாப்பு, சுயமாகவும், சுதந்திரமாகவும் முடிவெடுக்க வழிவகை செய்தல் குறித்தும் விளக்கவுரையாற்றினார். மேலும் சமூகநலத்துறை மூலம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் தாலிக்கு தங்கம் மற்றும் நிதிதிட்டம், கலப்பு திருமண நிதி உதவி திட்டம், விதவை மறுமண நிதி திட்டம், ஆதரவற்ற பெண்கள் நிதி உதவி திட்டம், ஏழை விதவை மகள் திருமண நிதி உதவி திட்டம், விதவைகளின் குழந்தைகளுக்கு பாடநூல் மற்றும் குறிப்பேடுகள் வழங்கும் திட்டம், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் குறித்தும் விளக்கவுரையாற்றினார். அதனை தொடர்ந்து மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெண்கள் அமைப்பு ஆலோசனையாளர்கள் அன்னலட்சுமி, சுசிலா, சிந்தியா உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து