பெரம்பலூர் மாவட்டத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசின் நிவாரண உதவிகள் : இளம்பை.இரா.தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      பெரம்பலூர்
Perambalaur

பெரம்பலூர் அருகில் உள்ள நொச்சியம் கிராமத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட தீவிபத்தில் மருதமுத்து என்பவரது வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்ததுடன், வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து முற்றிலும் நாசமாயின.

அதனைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்செல்வன், தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அரசின் நிவாரண உதவிகளாக மருதமுத்து குடும்பத்திற்கு ரூ.5,000 தொகை, வேட்டி, சேலை, அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட உதவிப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து