தருமபுரி நகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் மாணவமாணவியர்கள் கல்வி சுற்றுலா சுற்றுலா அலுவலர் என்.பி.சிவராஜ் துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      தர்மபுரி
1

 

தருமபுரி நகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் மாணவமாணவியர்கள் ஒரு நாள் சுற்றுலாவை சுற்றுலா அலுவலர் என்.பி.சிவராஜ் துவக்கி வைத்தார்.

சுற்றுலாத்துறை சார்பாக மாணவமாணவியர்களிடையே சுற்றுலா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்வியில் சிறந்து விளங்கும் மற்றும் பொருளாதார ரீதியில் பின் தங்கிய 150 அரசுப்பள்ளி மாணவமாணவியர்களை தேர்ந்தெடுத்து பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்ப்பட்டுள்ளது.

கல்வி சுற்றுலா

இதன்படி தருமபுரி மாவட்டத்தில் இச்சுற்றுலா நேற்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவிற்காக 150 பள்ளி மாணவமாணவிகளை (7ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சொகுசு பேருந்துகளில் பாப்பாரப்பட்டி தியாகி சுப்ரமணி சிவா நினைவு மண்டபம், காவேரிப்பட்டிணம் அருகில் அமைந்துள்ள பென்னேஸ்வரர் சிவன் கோவில் மற்றும் கிருஷ்ணகிரி அருகில் அமைந்துள்ள கே.ஆர்.பி. அணைக்கட்டு ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அனைத்து மாணவஃமாணவியர்களுக்கும் தரமான உணவு வழங்கப்படுகிறது. சுற்றுலாவின் போது வினாடி - வினா போட்டி நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி நகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் மாணவஃமாணவியர்கள் ஒரு நாள் சுற்றுலாவை சுற்றுலா அலுவலர் என்.பி.சிவராஜ் துவக்கி வைத்தார். சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் (ஓகேனக்கல்) உதயகுமார் மற்றும் உதவி திட்ட அலுவலர் (அனைவரும் இடைநிலைக் கல்வித்திட்டம்) எம்.சுப்ரமணியன் மற்றும் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராம்பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து