கிருஷ்ணகிரியில் நாளை உலக அமைதி ரத யாத்திர துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைக்கிறார்

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      கிருஷ்ணகிரி

 

கிருஷ்ணகிரியில் ஸ்ரீபார்சவ பத்மாவதி அம்மன் ஜெயின் கோயில் உள்ளது.இதன் பிடாதிபதியாக ஸ்ரீ வசந்த் விஜய் ஸ்ரீ மகராஜ உள்ளார்.இந்த கோயில் சார்பில் உலக அமைதிக்கான ரத யாத்திரை விஸ்வந்த் யாத்ரா 2018 நடைபெறவுள்ளது.

துணை முதல்வர் வருகை

நாளை 4ம் தேதி மாலை 6-30 மணிக்கு கோயில் வளாகத்திலிருந்து துவங்க உள்ளது.இந்த யாத்திரை இந்தியாவின் 11- மாநிலம் வழியாக 280 - முக்கிய நகரங்களுக்கு உலக அமைதி, பண்பாட்டு கலாச்சார பிரச்சார உலக அமைதியை பறைசாற்றும் விதமாக நடைபெறவுள்ளது

இதனை தொடர்ந்து உலகின் மிகப்பெரிய கோபுரம் கொண்ட ஜெயின் கோயில் கும்பாபிஷேகம் விரைவில் . நடைபெற உள்ளது.இந்த ரத யாத்திரயை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தேனியில் இருந்து கார் மூலம் கிருஷ்ணகிரிக்கு வருகை தருகின்றார்.கிருஷ்ணகிரி வரும்

துணை முதல்வரை கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சப்பாணிப்பட்டியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி,மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி. எம்பி.அசோக்குமார்,எம்.எல்.ஏக்கள் ராஜேந்திரன்,மனோரஞ்சிதம் நாகராஜ் மற்றும் அதிமுகவினர் வரவேற்பு அளிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து சென்னை சாலையில் உள்ள ஸ்ரீ பார்சவ பத்மாவதி அம்மன் சக்தி பீடத்திற்கு சென்று ரத யாத்திரையை மாலை 6.30 மணிக்கு துவக்கி வைக்க உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து