முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் தனியுரிமைக்கான உரிமை

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் தனியுரிமைக்கான உரிமை சேலம் 01.03.2018 அரசியலமைப்புச் சட்டப் பார்வையின் கீழ் தனியுரிமைக்கான உரிமை - சிறப்புரை சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் 1/3/2018 வியாழக்கிழமை அன்று “அரசியலமைப்புச் சட்டப் பார்வையின் கீழ் தனியுரிமைக்கான உரிமை”என்ற தலைப்பிலான சிறப்புரை நிகழ்வு நடைபெற்றது. கல்லூரியின் செயலாளர் .த.சரவணன் தலைமை வகித்தார். முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் .வி.தனபாலன் சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் . இன்றைய சூழலில் தனியுரிமைக்கான உரிமையைப் பாதுகாப்பதில் மாண்பமை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள முக்கியத் தீர்ப்புகளை மேற்கோளிட்டும், அதனின் சிறப்பம்சங்களை விளக்கியும் விரிவாக எடுத்துரைத்தார். அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 14, 19 மற்றும் 21ஆகியவற்றில் உள்ள தனியுரிமைக்கான உரிமை குறித்த அம்சங்கள் குறித்து விளக்கினார். மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள முகப்புரையை எடுத்துக் கூறி, அதனில் உள்ள தனியுரிமைக்கான உரிமையை உள்ளடக்கிய பதம் “தனிமனிதனின் கண்ணியம்” என்பதனை அடிக்கோடிட்டுத் தெளிவாக விளக்கினார். நீதிபதி புட்டாசாமி எதிர் இந்திய யூனியன் வழக்கில் மாண்பமை உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் சாராம்சமான தனியுரிமைக்கான உரிமையானது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி 3இன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் கீழ் அடிப்படை உரிமையாகும் என்பதனை தெளிவாக எடுத்துக் கூறினார். சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் 1948 மற்றும் வாழ்வுரிமை மற்றும் அரசியல் உரிமைகளுக்கான நாட்டிடை உடன்படிக்கை 1966 ஆகியவற்றின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தனியுரிமைக்கான உரிமை குறித்த அம்சங்களை எடுத்துரைத்தார். மேலும் சட்ட மாணவ மாணவிகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பயில்வதன் முக்கியத்துவத்தையும், மாணவ மாணவிகள் அதனைப் எளிதில் புரிந்து கொள்வதற்கான வழிமுறைகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார். முன்னதாக சட்டக் கல்லூரியின் மாணவ - மாணவியர்கள் கேட்ட பல சந்தேகங்களுக்கு நீதியரசர் விரிவான விளக்கம் அளித்தார். இச்சிறப்புரைக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் பேகம் பாத்திமா அவர்கள் செய்திருந்தார். நிறைவாக உதவிப் பேராசிரியர் .மாணிக்க விநாயகம் அவர்கள் நன்றி கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து