2019-ல் உலக கோப்பையை வெல்ல கோலி ஆக்ரோ‌ஷமும் - டோனி அமைதியும் தேவை முன்னாள் கேப்டன் கபில்தேவ் பேட்டி

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      விளையாட்டு
kapil dev 2017 9 27

மும்பை: 2019-ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா வெல்ல கேப்டன் விராட் கோலியின் ஆக்ரோ‌ஷமும், டோனியின் அமைதியும் அவசியம் என இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.

பயன் அளிக்கும்
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
2019-ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா வெல்ல கேப்டன் விராட் கோலியின் ஆக்ரோ‌ஷமும், டோனியின் அமைதியும் அவசியம். அணியில் ஒவ்வொருவரும் ஆக்ரோ‌ஷமாக இருந்தாலும் சிக்கல், அனைவரும் அமைதியாக இருந்தாலும் சிக்கல். எனவே கோலி, டோனியை போல ஆக்ரோ‌ஷமும், அமைதியும் சம அளவில் இருப்பது அணிக்கு பயன் அளிக்கும்.

மகிழ்ச்சி அளிக்கிறது
தெண்டுல்கர், ராகுல், சேவாக், லட்சுமணன் ஆகிய வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணி மீண்டும் எழுச்சி பெற்று சிறப்பாக விளையாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகிய சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களுக்கு தற்போது அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில் ரிஸ்ட் ஸ்பின்னர்களும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள்.

ஜொலிக்க வாய்ப்பு
ஆல்-ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா நெருக்கடி இல்லாமல் விளையாட வேண்டும். மற்ற ஆல்- ரவுண்டர்களோடு ஒப்பிடும் போது அவர் மீது அழுத்தம் வைக்கப்படுவதாக கருதுகிறேன். அவர் அழுத்தமின்றி நெருக்கடியின்றி அனுபவித்து விளையாட வேண்டும். பாண்ட்யா பேட்டிங்கில் சிறிது கவனம் செலுத்தினாலே சிறந்த ஆல்-ரவுண்டராக ஜொலிக்க வாய்ப்பு ஏற்படும். பந்து வீச்சும் தானகவே வந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து