காவல் துறையில் துணை கண்கானிப்பாளராக நியமனம்: இந்திய மகளிர் கிரிக்கெட் டி-20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் புது அவதாரம்

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      விளையாட்டு
Harmanpreet Joins Punjab Police 2018 03 02

சண்டிகர்: இந்திய மகளிர் கிரிக்கெட் டி20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பஞ்சாப் மாநில காவல் துறையில் துணை கண்கானிப்பாளராக (டி.எஸ்.பி) பணியில் இணைந்துள்ளார்.

கவுர் கடிதம்..
இந்திய மகளிர் கிரிக்கெட் டி20 அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் உள்ளார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் கடந்த ஆண்டு உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதால் அம்மாநில காவல்துறையில் டி.எஸ்.பி பதவி அளிக்க தயாராக இருப்பதாக முதல்வர் அம்ரீந்தர்சிங் அறிவித்திருந்தார். ரெயில்வே துறையில் பணியாற்றி வந்த ஹர்மன்ப்ரீத் கவுர் பஞ்சாப் மாநில காவல்துறையில் இணைய முடிவெடுத்ததை அடுத்து தன்னை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என ரெயில்வே மந்திரிக்கு கவுர் கடிதம் எழுதியிருந்தார்.

முதல்வர் அணிவித்தார்
அவருக்கு முதல்வர் அம்ரீந்தர்சிங் பரிந்துரையும் செய்திருந்தார். இந்நிலையில், முறைப்படி காவல்துறையில் கவுர் இணைந்துள்ளார். அவருக்கு முதல்வர் அம்ரீந்தர் மற்றும் மாநில டி.ஜி.பி சீருடையில் ஸ்டாரை அணிவித்தனர்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து