முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ: அதிருப்தியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.கள் - அமைச்சர் தங்கமணி பேச்சு

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018
Image Unavailable

அதிருப்தியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.கள் - அமைச்சர் தங்கமணி பேச்சு பிள்ளை பிடிப்பவர்களைப்போல எம்.எல்.ஏக்களை பிடிக்க முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன் செந்தில் பாலாஜி ஆகியோரை தினகரன் ஏவி விட்டுள்ளார் அவர்கள் கனவு பலிக்காது என்றும் அன்னியச் செலவானி ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி சிறை சென்ற தினகரனுக்கு அதிமுக அரசு மீது குறைகூற எந்த தகுதியும் இல்லை திருச்செங்கோட்டில் நடைபெற்ற ஜெயலலிதாவின் 70 வது பிறந்ததின விழா பொதுக்கூட்டத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி பேச்சு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது விழாவிற்கு தலைமை தாங்கி பேசிய தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசுகையில் ... தினகரன் ஆர்.கே.நகரில் வெற்றிபெற்றபின் மக்களும் தொண்டர்களும் என் பக்கம்தான் இருக்கிறார்கள். இவர்களிடத்தில் வெறும் ஆட்சிமட்டும் தான் இருக்கிறது எனவும் இந்த ஆட்சி ஊழல் ஆட்சி இந்த ஆட்சி போக வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் என்று சொல்லுகிறார். திமுகாவோ அல்லது மற்றவர்கள் குறை சொன்னால் பரவாயில்லை என்றும் தினகரனிடம் நான் பலமுறை கேட்டும் பதில் இல்லை என்றும் 91-ஆம் ஆண்டில் தினகரன் எங்கே இருந்தார் என்றும் சென்னையில் பலகோடி மதிப்புள்ள வீட்டை எப்படி கட்டினார் என்றும் 95-ஆம் ஆண்டு அன்னியச் செலவானி மோசடியில் கைதாகி 1ஆண்டு சிறை தண்டனை பெற்ற தினகரனுக்கு அதிமுக அரசு மீது குறை கூற எந்த தகுதியும் இல்லையென்றும் தற்போது தனக்கு முதலமைச்சர் பதவிமீது ஆசை இல்லையென்றும் இந்த 18 பேரில் ஒருவரை முதலமைச்சர் ஆக்குவேன் என்று கூறி இந்த ஆட்சி போய்விடும் என்று இதுநாள்வரை ஓட்டிவிட்டார் என்றும் தற்போது 18-பேரில் செந்தில்பாலாஜி மற்றும் பழனியப்பன் ஆகிய இருவரில் ஒருவரை முதலமைச்சர் ஆக்குவேன் என்று கூறி இப்போது இருவரும் பிள்ளை பிடிப்பவர்களைப்போல எம்.எல்.ஏக்களை பிடிக்க இவர்கள் இருவரையும் தினகரன் ஏவி விட்டுள்ளதாகவும் அவர்கள் கனவு பலிக்காது என்றும் அமைச்சர் தங்கமணி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து