பதுங்கி பாயனும் தல

சனிக்கிழமை, 3 மார்ச் 2018      சினிமா
Pathungi-Paayanum-Thala

எஸ்.பி. மோசஸ் முத்துப்பாண்டி இயக்கத்தில் மைக்கேல் - நைனிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பதுங்கி பாயனும் தல’ படத்தின் முன்னோட்டம்.

மீடியாபே‌ஷன் புரொடக்‌ஷன்ஸ் மூலம் ஆமீனா ஹூசைன் தயாரிக்கும் படம் ‘பதுங்கி பாயனும் தல’.

இதில், பர்மா மைக்கேல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக நைனிகா நடிக்கிறார். இவர்களுடன் வேலராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி, ஆர்.என்.ஆர்.மனோகர், சிங்கப்பூர் தீபன், ராகுல் தாத்தா, ஹலோ கந்தசாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.ஒளிப்பதிவு - கே.ஏ.ரோவின் பாஸ்கர், இசை - வல்லவன் சந்திரசேகர், படத்தொகுப்பு - டி.மனோஜ், ஸ்டண்ட் - ஸ்டன்னர்சாம், கலை - ரவீஷ், நடனம் - நோபல், பாபா பாஸ்கர், பேபி ஆன்டனி, கேசவ்.தயாரிப்பு - ஆமீனா ஹூசைன், இயக்கம் - எஸ்.பி. மோசஸ் முத்துப்பாண்டி, இவர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் இணை இயக்குனராகவும், சீமானிடம் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தவர்.

“இது முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம். இதில், வேலராமமூர்த்திக்கு முக்கிய வேடம். மனோகர், எம்.எஸ்.பாஸ்கர், காமெடி வில்லன்களாக நடிக்கிறார்கள். சிங்கப்பூர் தீபன், ராகுல் தாத்தா, மனோகர் காமெடியில் கலக்குகிறார்கள். குழந்தைகள் குடும்பத்துடன் உட்கார்ந்து வயிறு குலுங்க சிரிக்கும்படி இந்த படம் உருவாகி இருக்கிறது. தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது” என்றார். “ இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. பாடல்களை எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளியிட டி.ராஜேந்தர், கயல் சந்திரன், ஒளிப்பதிவாளர் வெற்றி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து