குமரியில் மே மாதம் திருப்பதி வெங்கடேஸ்வரா கோயில் திறப்பு: தேவஸ்தான அதிகாரி தகவல்

சனிக்கிழமை, 3 மார்ச் 2018      ஆன்மிகம்
tirupati 2017 04 14

திருப்பதி, தமிழகத்தில் கன்னியாகுமரி, அரியானா மாநிலத்தில் குருஷேத்ரா ஆகிய இடங்களில் இந்த ஆண்டு மே மாதத்துக்குள் திருப்பதி வெங்டேஸ்வரா கோயில் திறக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பாக திருப்பதியில் நேற்று திருமலை தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் நிருபர்களிடம் கூறியதாவது,

தமிழகத்தில் கன்னியாகுமரியிலும், அரியானா மாநிலம் குருஷேத்ராவிலும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடேஸ்வரா கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கோயில் வரும் கோடை காலத்துக்குள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும். கன்னியாகுமரியில் ரூ.22.60 கோடியில் கட்டப்பட்டுவரும் கோயில், வரும் மே மாதம் திறக்கப்படும். அரியானாவில் ரூ.34.60 கோடியில் கட்டப்பட்டு வரும் வெங்கடேஸ்வரா கோயில் பணிகள் முடிந்து, ஏப்ரல் மாதம் திறக்க முடிவு செய்துள்ளோம்.


மேலும், சென்னையில் ரூ.7 கோடி செலவில் சிறீ பத்மாவதி தாயார் கோயிலும் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. மேலும், ஒடிசா மாநிலம், புவனேஷ்வர் நகரிலும் ரூ. 7 கோடி செலவில் வெங்கடேஷ்வரா கோயில் கட்டும் பணியும் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு  அனில் குமார் சிங்கால் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து