முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் மேகாலயா முதல்வர் வெற்றி

சனிக்கிழமை, 3 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

ஷில்லாங்: மேகாலயா முதல்வர் முகுல் சங்மா போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

59 தொகுதிகளை கொண்ட மேகாலயா மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 59 தொகுதிகளிலும் போட்டியிட்டது.  காங்கிரஸ் 21 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது.

மேகாலயாவில் காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வருகிறது. இம்முறையும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் காங்கிரஸ் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்தனர்.

இதேபோல் இம்முறையாவது மேகாலயாவில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பாஜகவும் தீவிரமாக வேலை செய்தது. ஆனால் பாஜக 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

மேகாலயா முதல்வர் வேட்பாளராக முதல்வர் முகுல் சங்மாவே மீண்டும் களமிறக்கப்பட்டார். முகுல் சங்மா அம்பதி மற்றும் சோங்ஸக் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.  போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் அவர் வெற்றிபெற்றுள்ளார். அம்பதி தொகுதியில் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் முகுல் சங்மா பாஜக வேட்பாளர் பகுல் ஹஜோங்கை வீழ்த்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து