முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. தேர்தலிலும் பா.ஜ.க.வின் வெற்றி தொடரும்: அமித்ஷா

சனிக்கிழமை, 3 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க வெற்றி தொடரும் என்று பா.ஜ.க தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவிலும் வெற்றி பெற்றால்தான் அதை பா.ஜ.கவின் பொற்காலம் என கூற முடியும். அதை நோக்கி முன்னேறுவோம். கர்நாடகாவில் பா.ஜ.க வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. திரிபுராவில் கூட்டணி கட்சிகளையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வோம். --- அமீத்ஷா

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பா.ஜ.கவுக்கு சாதகமாக வெளியான நிலையில், நிருபர்களிடம் அமித்ஷா கூறியதாவது,

பா.ஜ.க இந்தியா முழுமைக்குமான கட்சியாக வளர்ந்து விட்டது என்பதை வடகிழக்கு மாநிலங்களில் பெற்ற வெற்றி நிரூபணம் செய்து காட்டிவிட்டது. ஆனால், கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவிலும் வெற்றி பெற்றால்தான் அதை பா.ஜ.கவின் பொற்காலம் என கூற முடியும். அதை நோக்கி முன்னேறுவோம்.

கர்நாடகாவில் பா.ஜ.க வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. திரிபுராவில் கூட்டணி கட்சிகளையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வோம். பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில், இந்தியாவின் மேற்கு மாநிலங்கள் வளர்ச்சியை பெற்றுள்ளன. கிழக்கு மாநிலங்கள் பின்தங்கியுள்ளன என்பதை சுட்டி காட்டினார். மோடியின் வளர்ச்சி கொள்கைகளை வடகிழக்கு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். பிரதமராக மோடி பதவியேற்றதுமே, ஆக்ட் ஈஸ்ட் பாலிசி  என்ற கொள்கையை அறிமுகப்படுத்தினார். இதனால் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளன. இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து