நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் 2 ஹாட்ரிக் நிகழ்வு !

சனிக்கிழமை, 3 மார்ச் 2018      விளையாட்டு
Wellingtons Logan 2018 3 3

வெல்லிங்டன் : நியூசிலாந்தில் உள்நாட்டு முதல் தர கிரிக்கெட் போட்டியில் ஒரே நாளில் 2 ஹாட்ரிக் எடுத்ததில் கிரிக்கெட் வரலாற்றில் முதல் சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது.

முதல் தர போட்டி...

நியூசிலாந்தில் உள்நாட்டு முதல் தர கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில்  பிளங்கட் ஷீல்டு கோப்பைக்கானப் போட்டித் தொடர் முக்கியமானது. 1906/07-ல் இருந்து நடத்தப்பட்டு வரும் இந்த தொடரில் முதல் முறையாக ஒரு சாதனை படைக்கப்பட்டது. வெலிங்டன் அணியும் கேன்டர்பரி அணியும் கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று மோதின. இந்தப் போட்டியில் வெலிங்டன் அணியின் வேகப்பந்துவீச்சாளர் லோகன் வான் பீக், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.


ஹாட்ரிக் விக்கெட்

அவர் நான்காவது ஓவரில் வீசிய கடைசி இரண்டு பந்துகளில் மைக்கேல் பொல்லார்டு, சாட் பவ்ஸ் ஆகியோர் வீழ்ந்தனர். அடுத்து அவர் வீசிய ஆறாவது ஓவரின் முதல் பந்தில், கென் மேக்லுர் வீழ்ந்தார். இதையடுத்து ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். இதையடுத்து வெலிங்டன் வெற்றிபெற்றது. இந்தப் போட்டி நடந்து முடிந்த ஒரு மணி நேரத்திலேயே மற்றொரு ஹாட்ரிக் விக்கெட் எடுக்கப்பட்டது. ஆக்லாந்து மற்றும் வடக்கு மாவட்ட அணிகளுக்கு இடையேயான போட்டி ஆக்லாந்து ஒவல் மைதானத்தில் நடந்தது. இதில் ஆக்லாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் மேக் இவான், எட்டாவது ஓவரின் கடைசி பந்தில் தொடக்க ஆட்டக்காரர் டீன் பிரான்லி விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து அவர் வீசிய பத்தாவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் பிஜேவால்டிங், டேரில் மிட்செல் ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

வரலாற்றில் முதன்முறை

ஒரு மணி நேர இடைவெளியில் இரண்டு ஹாட்ரிக் விக்கெட் எடுத்திருப்பதும் இரண்டும் 2 ஓவர்களில் எடுக்கப்பட்டிருப்பதும் நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறை என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து