3-வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து திரில்லிங் வெற்றி!

சனிக்கிழமை, 3 மார்ச் 2018      விளையாட்டு
england victory 2018 3 3

வெல்லிங்டன் : நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி திரில்லிங் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது போட்டியில் நியூசிலாந்தும்  இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றிப்பெற்றன. மூன்றாவது போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது.

பீல்டிங் தேர்வு...

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. இதன்படி முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, 234 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் மோர்கன் அதிகப்பட்சமாக 48 ரன்களும் ஸ்டோக்ஸ் 39 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் சோதி 3 விக்கெட்டுகளும் போல்ட் 2 விக்கெட்டுகளும் கிராண்ட்ஹோம், சவுதி தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். மூன்று பேர் ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வில்லியம்சன் சதம்

பின்னர் ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணியில் குப்திலும் முன்றோவும் களமிறங்கினர். வந்த வேகத்திலேயே வோக்ஸ் பந்தில், குப்தில் அவுட் ஆனார். அடுத்து முன்றோவுடன் இணைந்தார் கேப்டன் வில்லியம்சன். 49 ரன்களில் முன்றோ ஆட்டமிழந்தார். இங்கிலாந்தின் நேர்த்தியான பந்துவீச்சில் அடுத்த வந்தவர்களும் அடுத்தடுத்து அவுட் ஆக, நிலைத்து நின்று விளையாடிய வில்லியம்சன் அபார சதமடித்தார். அவருக்கு ஒத்துழைப்புக் கொடுத்த சன்ட்னர் 41 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆக, போட்டியில் பதற்றம் தொற்றிக்கொண்டது.

இங்கிலாந்து வெற்றி...

கடைசி ஓவரில் நியூசிலாந்துக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ரன் கிடைக்கவில்லை. இரண்டாவது பந்தில் இரண்டு ரன் எடுத்த வில்லியம்சன் முன்றாவது பந்தை சிக்சருக்குத் தூக்கினார். அடுத்த பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார். அடுத்த பந்தில் ரன் கிடைக்கவில்லை. கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், கடைசி பந்தை யார்க்கராக வீசினார் வோக்ஸ். அதை அடிக்க முடியாததால் ரன் கிடைக்கவில்லை. இதையடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. வில்லியம்சன் 112 ரன்கள் எடுத்தார்.  இந்த வெற்றியின் மூலம் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து